சென்னையில் மூத்த குடிமக்களுக்கான முதல் ரேடியோ தொடக்கம்..! - Seithipunal
Seithipunal


வரும் 21 தேதி சென்னையில் முதியோர்களுகான முதல் ஆன்லைன் வானொலி நிலையம் தொடங்கப்படவுள்ளது.

அன்னை அன்பாலையா அறக்கட்டளை சார்பில் முத்த குடிமக்களுக்கான ஆன்லைன் ரேடியோ தொடங்கபடவுள்ளது. இது முழுக்க முழுக்க முதியோர்களே நடத்த போகின்றனர். உலக மூத்த குடிமக்கள் தினமான ஆகஸ்ட் 21ம் தேதி இந்த வானொலி நிலையம் தொடங்கபடவுள்ளது. சென்னையில் முதியோர்களுக்காக உருவாகும் முதல் ரேடியோ இதுவாகும்.

அன்னை அன்பாலையா வளாகத்தில் தொடங்கப்படும் இந்த வானொலி நிலையத்தில் பல்வேறு முதியோர் இல்லங்களில் உள்ள மூத்த குடிமக்களின் திறமைகளை வெளிக்காட்டும் வகையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யபட்டுள்ளது. புது டெல்லியை சேர்ந்த சமூக பாதுகாப்பு நிறுவனத்தால் இந்த வானொலி நிலையம் செயல்படுத்தபடும்.

வாரத்தில் குறைந்தது 4 நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் சார்ந்த விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் ஒளிபரப்படும். மத்திய சமூக மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தற்போது நாடெங்கிலும் உள்ள 10 சமூக வானொலி நிலையங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. அதில் இந்த வானொலியும் ஒன்றாகும். ஏற்கனவே கோவையில் இது போன்ற வானொலி நிலையம் இருப்பது குறிப்பிட்டதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Aged Persons Radio FM Service


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->