செங்கல்பட்டு சுங்கச்சாவடி அடித்துநொறுக்கப்பட்ட போது, ரூ.18 இலட்சம் கொள்ளைபோன வழக்கில் திடீர் திருப்பம்...!! - Seithipunal
Seithipunal


சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு பரனூரில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கான சுங்கச்சாவடி இருக்கிறது. இந்த சுங்க சாவடியில் ஊழியர்களாக வடமாநிலத்தை சார்ந்த நபர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு விரைவு பேருந்து புறப்பட்டு சென்றுள்ளது. இந்த பேருந்தை நாங்குநேரி பகுதியை சார்ந்த நாராயணன் (வயது 38) எனபவர் இயக்கி வந்துள்ளார். அம்பாசமுத்திரம் பகுதியை சார்ந்த பசும்பொன் முத்துராமலிங்கம் என்பவர் நடத்துனராக இருந்து வந்துள்ளார்.

இந்த பேருந்து சுங்கச்சாவடிக்கு வந்த நேரத்தில், அரசு பேருந்திற்கு கட்டணம் கேட்டுள்ளனர். சுங்கச்சாவடியை கடந்து செல்வதற்கு பாஸ் டேக் ஏற்கனவே எடுத்துள்ளதாகவும், பணம் கொடுக்க இயலாது என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து சுங்கசாவடி ஊழியர்கள் மற்றும் பேருந்து ஓட்டுனருக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தை அடுத்து, சுங்கச்சாவடி ஊழியர்களின் அத்துமீறிய பேச்சை எதிர்த்துக்கேட்ட ஓட்டுனரை குல்தீப் சிங் மற்றும் விகாஷ் குப்தா ஆகியோர் ஓட்டுனரை தாக்கியுள்ளனர். பின்னர் பேருந்து நடத்துனரையும் தாக்கியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர் பேருந்தை சுங்கவடிக்கு குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபடவே, இவருக்கு பின்னால் வந்த பேருந்து ஓட்டுநர்களும் பேருந்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நள்ளிரவு நேரத்தில் வாகனங்கள் வரிசையாக நின்றுகொண்டு இருக்க, பேருந்து ஓட்டுனர்கள் தாக்கப்படும் காட்சியை கண்டு அதிர்ச்சியான பேருந்து ஓட்டுனர்கள் சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கினர்.

பின்னர் அங்குள்ள கட்டண கவுண்ட்டர்களை அடித்து நொறுக்கியுள்ளார். மேலும், இதனை எதுவாக வைத்து சிலர் சுங்க கட்டணம் வசூல் செய்து வைக்கப்பட்ட பணத்தையும் திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து போக்குவரத்தை சீர் செய்தனர். இதன் காரணமாக சுமார் 3 மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அதிகாலை 4 மணிக்கு பின்னர் வாகனங்கள் சென்றுள்ளது. 

இந்த விஷயம் தொடர்பான விசாரணைக்கு பின்னர் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர், சுங்கச்சாவடி ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், சுங்கச்சாவடியில் உள்ள 12 கவுன்ட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில், இதனை சரி செய்யும் வரை சுங்க கட்டணம் வசூல் செய்யாமல் வாகனங்கள் செல்ல அனுமதி செய்யப்பட்டுள்ளது. காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் ரூ.18 இலட்சம் 12 கவுன்ட்டரிகளில் கொள்ளை போயுள்ளது தெரியவந்துள்ளது. 

சுங்கச்சாவடி சூறையாடப்பட்டது தொடர்பான காமெடி வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், தற்போது காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பான விசாரணையில் சுங்கச்சாவடியில் பணியாற்றி வந்த ஊழியர்களின் மீது சந்தேகம் அதிகரித்ததை அடுத்து, பணத்தை திருடிய செல்வம் மற்றும் மற்றொருவர் தாமாக முன்வந்து திருடியதை ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து கைது செய்யப்பட்டனர்.. இதுமட்டுமல்லாது சுங்கச்சாவடியில் பணியாற்றி வரும் 10 பேரிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chengalpattu toll gate violence amount theft case investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->