கல்குவாரிக்கு குளிக்க செல்ல ஆவலா?.. இந்த செய்தியை படித்துவிட்டு செல்லுங்கள்.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காந்தளூரில் கல்குவாரி குட்டை உள்ளது. தற்போது போதுமான அளவு மழை பெய்துள்ளதால், கல்குவாரியில் உள்ள குட்டையில் நீர் நிரம்பியுள்ளது. இதனையடுத்து பலரும் அங்கு சென்று கல்குவாரியின் உண்மை நிலவரம் புரியாமல் குளித்து வருகின்றனர். 

இந்நிலையில், சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியை சார்ந்த நண்பர்கள் தமீம் அன்சாரி, சபீதா, ஏஞ்சல் காந்தளூர் கல்குவாரி குட்டைக்கு சென்றுள்ளனர். இவர்கள் மூவரும் குளித்துக்கொண்டு இருந்த நிலையில், எதிர்பாராத வகையில் நீரில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காந்தளூர் காவல் துறையினர் மற்றும் செங்கல்பட்டு தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

மேலும், கல்குவாரிக்கு சென்று மக்கள், இளைஞர்கள் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், கல்குவாரியில் எங்கு கூர்மையான கற்கள் உள்ளது? எங்கு ஆழமான பகுதி என்பது தெரியாது என்றும், இதனால் எதிர்பாராத மரணங்கள் நிகழும் என்றும் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chengalpattu Stone Quarry Swimming Persons Death 18 Jan 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->