திமுக என்றாலே அராஜகம், அட்டகாசம், கட்டப்பஞ்சாயத்து.... மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளர் திருமதி. மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து, அச்சிறுப்பாக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

இந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசுகையில், " வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது ஜாதி பிரச்சனை கிடையாது. சமூக நீதி மற்றும் வளர்ச்சி பிரச்சனை. வன்னியர்களை போல உள்ள பிற சமூகத்திற்கும் அவர்களுக்கானதும் பெற்று தரப்படும். அதுவே சமூக நீதி. நமது கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறவுள்ளது. தமிழக மக்கள், விவசாய பெருமக்கள், பெண்கள் தமிழக முதல்வராக மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி வர வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள். 

திமுக என்றாலே அராஜகம், அட்டகாசம், கட்டப்பஞ்சாயத்து, பெண்மையை மதிக்க தெரியாத கட்சி. திமுகவினர் மட்டுமே பெண்களை அராஜகமான வார்த்தைகளால் திட்டுவார்கள். தாயைப்பற்றி கொச்சையாக திமுக ஆ.ராசா பேசுகிறார். யாருடையாக தாயாக இருந்தாலும் அது தாய் தான். திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் மற்றும் எம்.பி கொச்சையாக பெண்மையை பற்றி பேசுகிறார். இன்று வரை திமுகவினர், மு.க ஸ்டாலின் அதனை கண்டிக்கவேயில்லை. 

திமுக கூட்டணி கட்சிகள் கூட ஆ.ராசாவை கண்டிக்கவில்லை. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு பெண்கள் குறித்து கவலையில்லை. மு.க ஸ்டாலினுக்கு பெண்களையும், பெண்மணியையும் மதிக்க தெரியாது. மு.க ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கும் பெண்களை மதிக்க தெரியாது. திமுக என்பது அராஜக கட்சி. நமது கூட்டணியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. முன்னேற்றம் கிடைக்கும். 

திமுகவினர் கடந்த 10 வருடமாக காய்ந்துபோயுள்ளார்கள். அவர்களை நீங்கள் அனுமதித்தால் மேய்ந்துவிடுவார்கள். அதற்கு நாம் அனுமதி அளிக்க கூடாது. நமது கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற இருக்கிறது. அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியை பெற வேண்டும் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chengalpattu PMK Dr Anbumani Ramadoss Election Campaign about DMK Criminal Activity 3 April 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->