அரசியல் வியாபாரியான மு.க ஸ்டாலின் - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு..! - Seithipunal
Seithipunal


மு.க ஸ்டாலின் என்னைப்பொறுத்தவரையில் அரசியல் வியாபாரி. கட்சியை வைத்து வியாபாரம் செய்பவர் என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளர் திருமதி. மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து, அச்சிறுப்பாக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

இந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசுகையில், " தமிழகத்தின் முதல்வராக மீண்டும் விவசாயி எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்க வேண்டும். 70 வருடத்திற்கு பின்னர் தமிழக முதல்வராக விவசாயி பொறுப்பேற்று இருக்கிறார். அவர் மீண்டும் தொடர வேண்டும். 

இந்த தேர்தல் நமக்கு முக்கியமான தேர்தல். வரும் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழக முதல்வராக மீண்டும் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொறுப்பேற்க, நாம் அமோக ஆதரவளித்து அவரை வெற்றிபெற செய்ய வேண்டும். 

நமது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயி. மு.க ஸ்டாலின் ஒரு அரசியல் வியாபாரி. மு.க ஸ்டாலின் என்னைப்பொறுத்தவரையில் அரசியல் வியாபாரி. கட்சியை வைத்து வியாபாரம் செய்பவர். அரசியல் என்பது புனிதமான சேவை. நாங்கள் அரசியலை சேவையாக செய்ய வந்துள்ளோம். மருத்துவர் இராமதாஸ் மருத்துவம் படித்துவிட்டு, சேவை செய்து அரசியலுக்கு வந்துள்ளார். நானும் மருத்துவம் படித்து முன்னேறிவிட்டேன். நீங்களும் முன்னேற வேண்டும் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chengalpattu PMK Dr Anbumani Ramadoss Election Campaign 3 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->