சிரித்து சிரித்து ஆப்படிக்க நினைத்த பெண்கள்.. சுதாரித்த பயணிகள்.. தப்பித்த நகைகள்.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு பகுதியை சார்ந்தவர் அரி கிருஷ்ணன். இவரது குடும்ப உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக ஓசூர் சென்றிருந்துள்ளார். இதன்பின்னர் அரசு பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்துள்ளார். ஹரியின் மகள் 5 பவுன் தங்க நகைகளை தனது கைப்பையில் வைத்திருந்த நிலையில், அறிமுகம் இல்லாத 3 பெண்கள் அருகே அமர்ந்து பேசிக்கொண்டு வந்துள்ளனர். 

பேருந்து திருப்பத்தூர் மாவட்டத்தின் வாணியம்பாடி நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே வருகையில், 3 பெண்களும் சுங்கச்சாவடியில் இறங்கியுள்ளனர். இதன்போது ஹரியின் மகள் வைத்திருந்த கைப்பை திறந்து இருந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஹரி சோதனை செய்கையில் நகையை காணவில்லை. 

இதன்போதே, அருகில் இருந்த பயணி நகையை திருடி பெண்கள் செல்வதாக குரல் எழுப்பவே, சுங்கச்சாவடியில் இருந்த பெண் காவல் அதிகாரியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பெண் காவல் அதிகாரி கல்பனா, நகையை திருடிய பெண்களை பிடிக்க செல்கையில் காயமடைந்தார். 

ஒருவழியாக மூன்று பெண்களையும் அவர் பிடித்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் மூவரும் திருவள்ளூர் பகுதியை சார்ந்த காவியா (வயது 30), பாரதி (வயது 28), சுனிதா (வயது 34) ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chengalpattu Hosur Travel Vaniyambadi girl arrest during theft


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->