செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தரமில்லாத வெண்டிலேட்டர்கள்?.. அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போது வரை 480 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கூடுவாஞ்சேரி பகுதியை சார்ந்த கீதா (வயது 50) என்ற பெண்மணி, கடந்த 4 ஆம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதி செய்யப்பட்டார். 

இவருக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்படவே, கொரோனா பரிசோதனை செய்ததில், முடிவு வெளியாகாமல் இருந்தது. மேலும், நெஞ்சு வலி இருப்பதும் உறுதியானது. உயிருக்கு போராடிய பெண்மணிக்கு வெண்டிலேட்டர் மூலமாக சுவாசம் பொருத்தப்பட்ட நிலையில், அது பழுதாகியுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கீதாவின் மகன், மருத்துவர்களிடம் தெரிவித்த பின்னர் மற்றொரு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. 

இருப்பினும், 4 ஆம் தேதியே கீதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், கீதாவின் மகன் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில், " செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டர்கள் இயங்கவில்லை. சரியில்லாத வெண்டிலெட்டரை நோயாளிக்கு வழங்குகின்றனர். இதனால் நோயாளிகள் மரணம் அடைகின்றனர் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chengalpattu girl died poor treatment admit fever


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->