செங்கல்பட்டு மாவட்டத்தில் வெகுவாக குறையும் கொரோனா.. மாவட்ட நிர்வாகம் நம்பிக்கை தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைபரவல் வீரியம் எடுத்துள்ள நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. பல மாவட்டங்களில் கொரோனாவின் உச்சக்கட்டம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முதலில் அதிகளவு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக இருந்த சென்னை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் குறைய தொடங்கியுள்ளது. கடந்த மாதங்கள் முழுவதும் சென்னைக்கு அடுத்தபடியாக அதிகளவு பாதிக்கப்பட்டமாக மாவட்டமாக செங்கல்பட்டு இருந்தது. 

கடந்த வாரம் வரையிலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளொன்றுக்கு சுமார் 2500 பேர் வரை பாதிக்கப்பட்டு வந்தனர். மாவட்ட நிர்வாகம் கொரோனாவை கட்டுக்குள் வைக்க பல்வேறு நடவடிக்கைகளை அதிரடியாக எடுத்து வந்தது. 

மேலும், ஊரடங்கும் விதிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குளேயே முடக்கப்பட்டதால் தற்போது கொரோனா ஊரடங்கு, தொடர் கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள் போன்றவை அம்மாவட்டத்திற்கு நல்ல பலனை வழங்கியுள்ளது. 

இதனால், கொரோனா பாதிப்பு கடந்த 4 நாட்களாக ஆயிரத்திற்கும் கீழ் குறையும் வகையில் கொரோனா குறைந்து வருகிறது. மேலும், பூரண நலன்பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் சில வாரத்திற்கு உள்ளாகவே கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிடும் என்றும், மருத்துவமனைகளும் மக்கள் கூட்டத்தில் இருந்து விடைபெறும் என்றும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chengalpattu Corona Virus Continuously Reduced 27 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->