இதென்ன கொடுமை…? பணத்தை பறி கொடுத்து, உயிரையும் இழந்த நபர்…! - Seithipunal
Seithipunal


 

திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி அருகே உள்ள பார்த்துப்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). டீக்கடை நடத்தி வருகிறார். இவருடைய நண்பர் பெயர் சந்தானம் (வயது 43)

மணக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர், இவர்கள் இருவரையும் அணுகி, தன்னிடம் பல கோடி ரூபாய் மதிப்பிலான நவரத்தினம் இருப்பதாக ஆசை வார்த்தை காட்டினார்.

இதனை நம்பிய நண்பர்கள் இருவரும், முருகனிடம் 4.50 லட்சம் பணத்தைக் கொடுத்தனர். ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட முருகன், தான் சொன்னபடி, நவரத்தினம் எதையும் தரவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை.

இதனால், முருகனிடம், தான் கொடுத்த பணத்தை கேட்டு வாக்குவாதம் செய்தார் சிவகுமார். அந்த சமயம், திடீரென்று, முருகன் தன்னிடம் இருந்த கத்தியால், சிவக்குமாரைச் சராமரியாகக் குத்தினார்.

அவரை உடனடியாக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே, சிவகுமார் பரிதாபமாக உயிர் இழந்தார்.

போலீசார் முருகனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English Summary

cheating and murder


கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
Seithipunal