மயிலாடுதுறையில் தேர் திருவிழா!  - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை 15.11.19 : மயிலாடுதுறை துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். 

நாகைமாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத்தை போன்று ஆண்டுதோறும் நடைபெறும் துலா உற்சவம் புகழ்பெற்றது. ஐப்பசி மாதம் காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக்கொள்வதாக ஐதீகம். 

அதனை முன்னிட்டு மயிலாடுதுறையில் பாடல்பெற்ற சிவாலயங்களில் துலா உற்சவம், கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் உற்சவம் இன்று மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு, சுவாமி, அம்பாள் ஆகியோர் தேரில் எழுந்தருளினர். திரளான பக்தர்கள் 
தேரை வடம்பிடித்து இழுத்தனர். 

இதே போல் மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் ஆலயத்திலும் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நாளை புகழ்பெற்ற துலா உற்சவம் நடைபெறுகின்றது. இதில், சிவாலயங்கள் மற்றும் திருஇந்தளுர் பெருமாள் ஆகியோர் காவிரிக்கு எழுந்தருளி, திர்த்தவாரி நடைபெறுகின்றது. தேரோட்டத்தில், திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீஅம்பலவாணதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்

செய்தியாளர் மணி 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chariot Festival in Mayiladuthurai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->