ஏசியால் ஏற்பட்ட மரண சம்பவத்தில் திடீர் திருப்பம்!! கொலை வழக்கா?!  - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே காவேரிபாக்கத்தில் ராஜி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். பட்டறை கடை நடத்தி வரும் இவர், நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் இல்லத்தில்  உறங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அறையில் இருந்த ஏசியில் மின்கசிவு எற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர்  தீயை அணைத்தனர். 

எனினும், வீட்டில் உறங்கி கொண்டிருந்த ராஜி, அவரது மனைவி கலா, மகன் கவுதம் ஆகியோர் உடல் கருகி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வீட்டின் மற்றொரு அறையில் உறங்கியதால் ராஜியின் மற்றொரு மகன் கோவர்த்தனன் மற்றும் கோவர்தனனின் மனைவி ஆகியோர் உயிர் தப்பினர். 

இந்த சம்பவம் தொடர்பாக திண்டிவனம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து மூவரின் உடலையும் கைப்பற்றி திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு  பிரேத பரிசோதனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார்  சம்பவம் நடைபெற்ற வீட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திண்டிவனம் காவல் நிலையத்துக்கு ராஜியின் மூத்த மகனான கோவர்த்தனனை அழைத்து வந்து திண்டிவனம் டி.எஸ்.பி. கனகேஸ்வரி உத்தரவின்பேரில், ஆய்வாளர் சீனிபாபு, வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டார். பின்னர், அந்த இயந்திரத்தை மெக்கானிக் மூலம் போலீஸார் பரிசோதித்தனர். 

ராஜியின் மகன் மற்றும் மருமகள் மட்டும் உயிர்தப்பி இருப்பது சந்தேகத்தை வரவழைத்தாலும், கெளதமன் தீக்காயத்தால் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், உடற்கூறு ஆய்வில் அவரது தலையில் ரத்தக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இதன்காரமான மூவரும் கொலை செய்யப்பட்டனரா? என பல்வேறு சந்தேகங்கள் தற்பொழுது உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

changes in ac accident case


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->