2 நாட்களுக்கு இந்த பகுதிகளில் மட்டும் கனமழை..! வானிலை மையம் எச்சரிக்கை..!  - Seithipunal
Seithipunal


மிழகம், புதுவையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. தமிழகத்தின் ஒரு சில இடங்களில் காலை மற்றும் இரவு வேளைகளில் லேசான சாரல் மழை பெய்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Image result for rain seithipunal

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் அதிக பட்சமாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் குறைந்த பட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகலாம் என்றும் தெரிவித்திருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chance for heavy rain for two days


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->