#Breaking: தமிழகத்தில் மேலும் 4 நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் - மத்திய அமைச்சர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


டெல்லிக்கு சென்றுள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்தார். மத்திய அமைச்சரிடம் தமிழகத்திற்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கி, நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களின் கல்வி பாதிப்பு, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு, தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்குவது, 3 ஆவது அலையை எதிர்கொள்வதற்கு தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என பல கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார். 

இந்நிலையில், தமிழகத்தில் நான்கு நகரங்களில் புதிதாக நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூரில் புதிதாக நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பான தகவல் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் இன்றைய சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ட்விட் பதிவு செய்துள்ளார். நீட் தேர்வுக்காக தமிழக மாணவர்கள் தயாராகி வரும் சூழலில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் மாவட்டங்களுக்கு அருகே நீட் தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Govt Announce NEET Exam Facility Added New 4 Districts in Tamilnadu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->