முதல்வரின் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்ட மத்திய அரசு.. பிறப்பித்த அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 220 மெட்ரிக் டன்னில் இருந்து 419 மெட்ரிக் மெட்ரிக் டன்னாக மத்திய அரசு ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 220 மெட்ரிக் டன்னில் இருந்து 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி கோரிக்கை வைத்திருந்தார். மேலும், தமிழகத்தின் கொரோனா பரவல் வீரியத்தையும் மேற்கோள் காண்பித்து பேசியிருந்தார்.  

இந்நிலையில், மத்திய அரசு தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 220 மெட்ரிக் டன்னில் இருந்து 419 டன்னாக உயர்த்தி அறிவித்துள்ளது. 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதுமட்டுமல்லாது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உற்பத்தியாகும் ஆக்சிஜனில் தமிழகத்திற்கான ஒதுக்கீடு 50 மெட்ரிக் டன்னில் இருந்து 140 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்கவும், சேலத்தில் உள்ள தனியார் ஆலையில் உற்பத்தியாகவும் ஆக்சிஜனில் நாளொன்றுக்கு 15 மெட்ரிக் டன் தமிழகத்திற்கு வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Govt Accept TN CM MK Stalin Request about Oxygen 8 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->