கொரோனா வைரஸ்னா என்ன? நாங்க எப்படி 'பாதுகாப்பா' இருக்குறது? குழந்தைகளுக்காக மத்திய அரசின் திட்டம்!! - Seithipunal
Seithipunal


கொரோனாவிலிருந்து சிறுவர் சிறுமிகள் தங்களை காத்து கொள்வது எப்படி என்பது குறித்த காமிக்ஸ் புத்தகம் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி ஆயிரக்கணக்கானோரை பலி வாங்கி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிற்குள் வந்த கொரோனா பெங்களூரு, கேரளா, டெல்லி, தமிழ்நாடு போன்ற பகுதியில் அறிகுறி இருப்பதாக உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்து கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் தமிழகத்தில் கொரோனாவின் நிலை என்ன? என்பதை கண்காணித்து மக்களுக்கு தெரிவித்து வருகிறார்.

தொடர்ந்து இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் ''தமிழகத்தில் இதுவரை கொரோனா அறிகுறி இருந்தவர்களை பரிசோதனை செய்ததில் அனைத்தும் நெகடிவ் ரிப்போர்ட்டாகவே வந்துள்ளது.

மேலும் கொரோனாவில் இருந்து விடுபடுவதற்கு அனைத்துவிதமான நடவடிக்கைகளும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் 'குழந்தைகள், வாயு மற்றும் கொரோனா(சண்டையில் யார் ஜெயிப்பார்கள்)' என்ற பெயரில் மத்திய அரசு காமிக்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ள இந்த காமிக்ஸ் புத்தகதம் 22 பக்கங்களைக் கொண்டுள்ளது. 

தங்களை காத்துக் கொள்வது என்பது வரையிலான குழந்தைகளின் அனைத்து சந்தேகங்களையும் விளக்கி வைக்கிறார். குழந்தைகளிடம் ஒரு விஷயத்தை அறிவுரையாக எடுத்து சொல்வதை விட காமிக்ஸ் மூலம் தெளிவு செய்தால் குழந்தைகளிடம் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு எளிதாக சென்றடையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Vaayu Link : https://www.mohfw.gov.in/Corona_comic_PGI.pdf 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central government released awareness comics for children


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->