4000 கோடி ரூபாய் முதலீட்டில் தயாரான தொழிற்ச்சாலையை நாளை திறந்து வைக்கும் முதல்வர்.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே 4000 கோடி ரூபாய் முதலீட்டு திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சியட் நிறுவனத்தின் டயர் தொழிற்சாலையை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை துவக்கி வைக்கிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழக அரசின் தொழில் துறைக்கும் சியட் டயர் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதையடுத்து. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மதுரமங்கலம் என்ற கிராமத்தில், சியட் நிறுவனம், டயர் மற்றும் டயர் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்துள்ளது.

இந்த தொழிற்ச்சாலையில் பத்து ஆண்டுகளுக்குள் 4000 கோடி ரூபாய் முதலீடு செய்து 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை துவக்கி வைக்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ceat tyre factory tomorrow open by cm


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->