தானடித்த மூப்பாக செயல்படும் கர்நாடகம்: தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி..? அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


காவிரி மேலாண்மை ஆணையம் தனது உத்தரவை செயல்படுத்தும் வகையில் ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.

இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், புதுதில்லியில் மே-28 ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட்டது. கர்நாடக பாசனத்துறை அமைச்சர் தமிழகத்திற்கு நீர் வழங்கும் கர்நாடக அணைகளில் போதுமான தண்ணீர் இல்லை. எனவே, ஆணைய உத்தரவு அடிப்படையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட இயலாது என்று கூறியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

சட்டவிரோதமானதும் காவிரி தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமானதும் ஆகும். இந்த நிலையில், மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு விடுவிக்க உத்தரவிட்ட தண்ணீரை பெறுவதற்கு என்ன நடவடிக்கையை தமிழக அரசு மேற் கொள்ளப்போகிறது என்பதை அறிந்து கொள்ள தமிழகமே ஆவலோடு காத்திருக்கிறது.

காவிரி ஒரு மாநிலத்திற்கு சொந்தமானதல்ல அதுதேசத்தின் சொத்து என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டுகி றோம். காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவு தான் இறுதியானது என்று வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு தண்ணீர் திறந்துவிடாமல் அடாவடித்தனமாக நடந்து கொள்ளும் கர்நாடக அரசின் நிலை குறித்து உடனடியாக ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கும் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளை தனது கட்டுப் பாட்டில் எடுத்துக் கொண்டு தமிழகத்திற்குரிய தண்ணீரை உரிய காலத்தில் வழங்க ஆணையத்தை வலியுறுத்த வேண்டும். கர்நாடக மாநில அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததற்கு கர்நாடக அரசின் செயல்முறைதான் காரணமாகும்.

பாசன காலமாக ஜூன் 1 முதல் ஜனவரி 31 வரை என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள் ளது. இதனடிப்படையில் ஜனவரி 31 ஆம் தேதி அனைத்து அணைகளிலும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டிருக்க வேண் டும். ஆனால், கர்நாடக அரசு தொடர்ந்து பாசனத்திற்கு நீரை பயன்படுத்தியதன் விளைவு தான் தற்போது அணைகளில் தண்ணீர் குறைவாக இருப்பதற்கு காரணமாகும்.

எனவே, கர்நாடக மாநில அரசு சொல்வதில் எவ்வித அடிப்படை நியாயமும் இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம். காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம் என எந்தவொரு அமைப்பினுடைய உத்தரவையும் மதிக்க மாட்டோம் என்று தானடித்த மூப்பாக கர்நாடக மாநில அரசு நடந்து கொள்வதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது.

உத்தரவை அமல்படுத்த கர்நாடக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் தனது உத்தரவை செயல்படுத்தும் வகையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாடுவிவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது என்று சண்முகம் தெரிவித்திருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cauvery water issue between karnataga


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->