சாதி கயிறுகள் விவகாரம்.! அமைச்சர் செங்கோட்டையன் கூறிய வார்த்தை.! - Seithipunal
Seithipunal


பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாட்டில் மாணவர்கள் ஜாதிவாரியாக கயிறுகள் கட்டச் சொல்லும் பள்ளிகளை கண்டறிந்து, அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கடந்த 2018 தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் சார்பில் பள்ளிக்கல்வி துறைக்கு கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டது. அதன் படி, "தமிழ்நாட்டிலுள்ள ஒருசில பள்ளிகளில் மாணவர்கள் விதவிதமான நிறங்களில் கையில் கயிறுகள் கட்டி உள்ளனர். 

குறிப்பாக அவை மஞ்சள், சிவப்பு, பச்சை மற்றும் காவி ஆகிய நிறங்களில் கயிறுகள் கட்டியிருக்கின்றனர். இந்தக் கயிறுகள் மூலம் மாணவர்களின் ஜாதிகள் கண்டுபிடிக்கப்படுகிறது" என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தற்போது பள்ளிக்கல்வித்துறை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன் படி, "தமிழ்நாட்டில் மாணவர்களை ஜாதிவாரியாக கயிறுகள் கட்டச் சொல்லும் பள்ளிகளை கண்டறிந்து, அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பள்ளிகளில் சாதிப்பிரிவினைகளை ஏற்படுத்தும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மாணவர்கள் கைகளில் சாதிய அடையாளங்களை குறிக்கும் கயிறுகளை கட்ட அனுமதிக்க கூடாது. மேலும் இதுபோன்று நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாதி அடையாளத்தை குறிக்கும் வண்ணக் கயிறு கட்ட தடை விதித்த விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் இந்த விவகாரத்தில் முந்தைய நடைமுறையே கடைபிடிக்கப்படும் என கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

caste icon in school students


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->