5% கமிஷன் ரூ.75 லட்சம்! திமுக எம்எல்ஏ மகனை போட்டுக் கொடுத்த அரசு அதிகாரி! - Seithipunal
Seithipunal


நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் கைப்பற்றப்பட்டது திமுக எம்எல்ஏவுக்கு சேர வேண்டிய பணம்! 

தமிழக முழுவதும் என்று நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, உள்ளாட்சித் துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இரு தினங்களுக்கு முன்பு அதிரடி சோதனை மேற்கொண்டனர். திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இச்சாதனையை டிஎஸ்பி நந்தகோபால் தலைமையில் ஆய்வாளர் சித்ரா, ஆய்வாளர் அருள் பிரசாத் உள்ளிட்ட ஏழுக்கு மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் உள்ள விருந்தினர் மாளிகை அறையில் இருந்து ரூ. 75 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.

இந்த சம்பவம் குறித்து உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்கு மூலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைப்பற்றப்பட்ட 75 லட்சம் ரூபாய் ஒப்பந்ததாரர்களிடமிருந்து கமிஷனாக பெறப்பட்டது. திமுக எம்எல்ஏவும், திருவாரூர் மாவட்டச் செயலாளருமான பூண்டி கலைவாணனுக்கு சேர வேண்டிய 5% சதவீத கமிஷன் தொகை என தனது வாக்குமூலத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் இந்த பணத்தை வாங்க பூண்டி கலைவாணனின் மகன் பூண்டி கலைஅமுதன் சம்பவ இடத்திற்கு வந்திருந்ததாகவும் அந்த வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார். உதவி கோட்ட பொறியாளர் அளித்த வாக்குமூலம் தற்பொழுது வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

மேலும் உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்து அளித்த வாக்குமூலத்தினை மாற்ற திமுக தரப்பு அழுத்தம் தருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாரிமுத்து விடும் மீண்டும் ஒப்புதல் வாக்குமூலம் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Captured money at Highway Department office to be given to DMK MLA


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->