வேலையை காப்பாற்றிக்கொள்ள, கேப் டிரைவர் செய்த செயலால் நடந்த விபரீதம்! - Seithipunal
Seithipunal


சென்னை ஜவஹர்லால் சாலையில் அமைந்துள்ள அம்பிகா எம்பையர் ஹோட்டல் அருகே காரை தீ வைத்து கொளுத்திய மதராசன்(வயது 27) என்ற கேப் டிரைவர் கைது செய்யப்பட்டார். இவர் ஒரு நட்சத்திர விடுதியில் கார் டிரைவராகப் பணியாற்றிவந்தார். இவர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் காவல் துறையினர் இவருக்கு அபராதம் விதித்தனர். 

இந்த விஷயம் ஹோட்டல் நிர்வாகத்துக்குத் தெரிந்தால் வேலையை விட்டு நிறுத்திவிடுவார்கள் என உணர்ந்த மதராசன் பின்னர் அதிலிருந்த தப்பிக்க புது விதமாக வழி ஒன்றைக் கண்டறிந்தார். அதன்படி அம்பிகா எம்பையர் ஹோட்டல் அருகே நிறுத்தப்பட்டிந்த கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். 

இவ்வாறு காரைக் கொளுத்தி தீ விபத்து ஏற்பட்டது என இவர் வேலை செய்யும், அம்பிகா எம்பையர் ஹோட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்து, தப்பித்துவிடலாம் என நினைத்துள்ளார். தீயை விரைவில் வந்து தண்ணிர் ஊற்றி அணைத்த காவல் துறையினர் பின்னர் மதராசனை கைது செய்தனர். 
 

English Summary

cab drive save the job


கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
Seithipunal