இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் இடையே போட்டி.! தொண்டர்கள் அதிர்ச்சி.!!  - Seithipunal
Seithipunal


நடைபெறவுள்ள நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தலில் திமுக போட்டியிட முடிவு செய்துள்ளது. ஆனால் அந்த தொகுதியில் குமரி அனந்தன் நிறுத்தினால் என்ன என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி பேசியுள்ளது அனைவரையும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதில் கடந்த 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் வசந்தகுமார் வெற்றி பெற்றார் லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் எம்எல்ஏ பதவியை  வசந்தகுமார் ராஜினாமா செய்தார். அதனால் காலியாக உள்ள நாங்குநேரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறியுள்ளார்.

ஆனால் இதற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி நாங்குநேரி தொகுதியை திமுகவுக்கு விட்டு தர வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். திருச்சி காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் உதயநிதி போட்டியிடுவதாக இருந்தால் காங்கிரஸ் விட்டுக் கொடுக்கத் தயார் என்று கூறியுள்ளார். 

இதையடுத்து உதயநிதி போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கே எஸ் அழகிரி பேசுகையில் பாரதிராஜாவின் முதல் மரியாதை படத்தில் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் என்ற வசனம் வரும் அதை போல எனக்கும் ஒரு உண்மை தெரியாததால் இரவில் தூக்கம் வருவதில்லை நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக குமரி அனந்தன் நிறுத்தினால் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது என்று எனக்கு எழுகிறது என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

by election is participate dmk or Gangrass


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->