கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு... அதிர்ச்சியில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸின் தாக்கம் காரணமாக அமலாகியிருந்த ஊரடங்கு, சில தளர்வுகளுடன் மூன்றாம்கட்ட ஊரடங்கு நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கில் சில பணிகளுக்கும் தளர்வுகள் வழங்கப்பட்டது. 

இதன்படி, கட்டுமான பணிகள் நடைபெற அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கட்டுமான பொருட்களின் விலையானது அதிர்ச்சி தரும் வகையில் உயர்ந்துள்ளது. மேலும், இந்த விலை உயர்வு ஊரடங்கு காரணத்தால் ஏற்பட்டுள்ள இழப்பை சரி செய்யும் பொருட்டு உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில், சிமெண்ட், செங்கல் மற்றும் எம்.சாண்ட் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. சிமெண்ட் மூட்டைக்கு ரூ.60 வரை உயர்ந்து. ரூ.420 க்கும், ஒரு யூனிட் எம்.சாண்ட் ரூ.ஆயிரம் உயர்ந்து, ரூ.7 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனைப்போன்று முறுக்கு கம்பிகள், செங்கல், ஜல்லி போன்ற கட்டுமான பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Building materials rate increased after corona curfew


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->