பாலம் கட்டிய 4 வருடங்களில் பல்லிளித்த பரிதாபம்!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக பாலம் ஒன்று பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. 

இந்த பாலத்தினை கட்டட ஒப்பந்ததாரர் முறையாக பணியை மேற்கொள்ளாமல் இருந்ததால் பாலம் அவ்வப்போது ஓட்டையாகி வருகிறது. தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. இந்த வாகனங்கள் அனைத்தும் இந்த பாலத்தை கடந்து கட்டாயம் செல்ல வேண்டும். 

இந்த காரணத்தால் இந்த முக்கியமான பாலத்தில் போக்குவரத்து அதிக அளவில் சென்று வருகிறது. இந்த நிலையில், இந்த பாலத்தில் கடந்த சனிக்கிழமையின்  போது மிகப்பெரிய ஓட்டை விழுந்துள்ளது. 

பாலத்தின் நடுவில் காங்கிரீட் கம்பிகள் தெரியும் அளவிற்கு பாலம் ஓட்டை விழுந்துள்ளதால், பேரிக்காட் வைக்கப்பட்டு பாலத்தில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளது.

ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் கட்டிய பாலங்கள் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அப்படியே இருக்கும் வகையில், தற்போது கட்டப்பட்ட பாலம் உடைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bridge damage within built-ed 4 years


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->