கட்டுறா தாலிய.. கல்யாணத்திற்கு மறுத்த காதலனுக்கு கோவிலில் இளம்பெண் கொடுத்த பதிலடி.! - Seithipunal
Seithipunal


3 ஆண்டுகளாக காதலித்துவிட்டு பின் காதலியை திருமணம் செய்து கொள்ள மறுத்து ஏமாற்ற முயன்ற வாலிபருடன், பொதுமக்களின் முயற்சியால் அப்பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது.

திருநாவலூர் ஒன்றியம் திம்மிரெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன், செல்வி தம்பதியினர். இவர்களது மகன் சுபாஷ் . டிப்ளமோ படித்துள்ளார்.

இதே பகுதியைச்சேர்ந்த வீராச்சாமி, மலர் ஆகியோரின் மகள் விஷ்ணுப் பிரியாவை சுபாஷ் காதலித்துள்ளார். நாளடைவில் விஷ்ணுப்பிரியாவும் சுபாஷை காதலித்துள்ளார்.

3 ஆண்டுகளாக இது தொடர்ந்துள்ளது.இந்நிலையில் சுபாஷ் வேலைக்கு வெளிநாடு செல்ல ஏற்பாடு நடைபெற்றுள்ளது. அப்போது விஷ்ணுப்பிரியா தன்னை திருமணம் செய்து கொண்டு பின் வெளிநாடு செல்லும்படி வற்புறுத்தியுள்ளார்.

அப்போது சுபாஷ் நான் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது. என் பெற்றோர் சொல்லும் பெண்ணைதான் திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறியுள்ளார்.

இதனை விஷ்ணுப்பிரியா அவரது பெற்றோரிடம் கூற பின் அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் கூறியுள்ளனர்.

பின்னர் சுபாஷ்மீது உளுந்தூர்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் விஷ்ணுப்பிரியா புகார் அளித்துள்ளார். பின்னர் அப்பகுதி ஊர் பெரியவர்கள் சுபாஷின் பெற்றோரிடம் பேசி பின் சம்மதிக்க வைத்துள்ளனர்.

உளுந்தூர்பேட்டை ஈஸ்வரன் கோவிலில் சுபாஷ், விஷ்ணுப்பிரியா திருமணம் இருவரின் பெற்றோர்கள், முன்னிலையில் நடைபெற்றது. பிறகு, உளுந்தூர்பேட்டை மகளிர் காவல் நிலையம் சென்று விபரம் தெரிவித்து புகார் மனுமீது சமாதான உடன்பாடு கையெத்தானது.

English Summary

boy try to cheat women brave action


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal