பதவி சர்ச்சை விவகாரத்தில், எடியூரப்பாவுக்கு தமிழகத்தில் இருந்து பறந்த ஆதரவு..! - Seithipunal
Seithipunal


எடியூரப்பா பதவி விலகல் சர்ச்சை தொடர்பான விவகாரத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் இருப்பதாக எஸ்.வி. சேகர் குற்றம் சாட்டியுள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பி.எஸ் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்று 2 வருடம் நிறைவுபெறவுள்ள நிலையில், அவர் கடந்த 2 வருடமாக மாநில மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று உட்கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களில் இருந்து எதிர்க்கட்சி வரை குற்றச்சாட்டு எழுந்தது. 

உட்கட்சியில் எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களே முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூங்கியதால் அவர் விரைவில் பதவி விலக இருப்பதாக தகவல்கள் வெளியானது. முதலில் இது தொடர்பான குற்றச்சாட்டுகளை எடியூரப்பா மறுத்தாலும், நேற்று கட்சியின் தலைமை ஜூலை 26 ஆம் தேதிக்கு பின்னர் எந்த முடிவு எடுத்தாலும் உடன்படுவேன் என்று பேட்டியளித்தார். இதனால் அவரின் பதவி விலகல் என்பது உறுதியாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

இந்த விஷயம் தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக பாஜக பிரமுகர் மற்றும் நடிகர் எஸ்.வி சேகர், " எடியூரப்பாவை திருப்திப்படுத்தாமல் முதல்வர் பதவியில் இருந்து நீக்கினால் பாஜக பின்னடைவை சந்திக்கும். வயது ஒரு காரணம் கிடையாது. இதனை மேற்கொள்காண்பித்து பதவியில் இருந்து நீக்குவது சரியானது கிடையாது. அரசியல் விவகாரத்தில் எடியூரப்பா சுறுசுறுப்புடன் இருப்பார். 

எடியூரப்பாவுக்கு எதிரான குழப்பத்தின் பின்னணியில் இருப்பவர் பி.எல் சந்தோஷ் தான். அவரை முதல்வராக கட்சி தலைமை அறிவிக்க வேண்டும் என் காயை நகர்த்தி வருகிறார். எடியூரப்பாவுக்கு உள்ள மக்கள் செல்வாக்கு அவருக்கு கிடையாது. எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து விலகினால் அது பாஜகவுக்கு பின்னடைவு தான். கட்சி தலைமை நல்ல முடிவை எடுக்க வேண்டும் " என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP TN SV Sekar Supports Karnataka CM Yediyurappa


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->