வனத்துறையால் பிடிக்க இயலவில்லை என்பதற்காக T 23 புலியை சுட்டுக்கொல்வதா?. பாஜக ஜி.கே. நாகராஜ் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


நீலகிரியில் மனிதர்களை தாக்கிய T 23 புலியை வனத்துறை சுட்டுக்கொலை செய்ய நடவடிக்கை எடுக்க கூடாது. அதனை தொழில்நுட்ப உதவியுடன் பிடிக்க முயற்சிக்க வேண்டும் என பாஜக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்தியாவின் தேசிய விலங்கான அழிந்துவரும் இனமான கூடலூர் தேவர் சோலைப்பகுதியில் புலி (T 23) ஒருவரை தாக்கி கொன்றது. அதைக்கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறை தோல்வியடைந்ததால், அதை சுட்டுக்கொல்ல தமிழக முதன்மை அதிகாரி திரு.சேகர்குமார் நீரஜ் உத்தரவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

பொதுவாக புலி காயமடைந்து வேட்டையாடும் திறன் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே, மிக எளிதாக கிடைக்கும் இரையான மனிதர்களை வேட்டையாடும். எனவே அப்புலியை நவீனகால தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திபத்திரமாக மீட்டு வனவிலங்கு பாதுகாப்பு பூங்காவில் வைத்து பாதுகாக்க வேண்டும். அதற்கு மாறாக அழிந்துவரும் இனமான புலியை சுட்டுக்கொல்ல வேண்டுமென்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

வனப்பகுதியினை பெருமளவில் மக்கள் ஆக்கிரமித்துவரும் வேளையில், இதுபோன்ற சுட்டுக்கொல்லும் உத்தரவு அரியவகை வனவிலங்குகள் அழிவிற்கு முன் உதாரணமாகவும், முக்கிய காரணமாகவும் அமைந்துவிடும். எனவே கடும்முயற்சியெடுத்து, புலியை பாதுகாப்புடன் மீட்டு, வனவிலங்கு பாதுகாப்பு பூங்காவில் உரிய சிகிச்சை அளித்து, பாதுகாக்க வேண்டும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP TN State Farmer President GK Nagaraj Condemn Forest Department Plan to Kill T 23 Tiger Nilgiris


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->