தமிழகத்தில் கூட்டணி குறித்து பாஜக தலைவர் முருகன் பேட்டி!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அதிமுக உடனான கூட்டணி தொடர்கிறது என்றும், 2021-ம் ஆண்டு தமிழக  சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் நிச்சயம் இருப்பார்கள் என்றும் பாஜக தமிழக மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கந்தசஷ்டி கவசத்தைக் கொச்சைப்படுத்திய கறுப்பர் கூட்டம்  சேனல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் இன்று வேல் பூஜை நடைபெற்றது.

இந்த பூஜையில் கலந்து கொண்ட பிறகு  பாஜக மாநில தலைவர் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "கந்த சஷ்டி கவத்தைக் கொச்சைப்படுத்திய கறுப்பர் கூட்டத்தின் ஒரு சிலர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அதற்கு பின்னணியில் உள்ளவர்கள் மற்றும் திமுகவுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும், கறுப்பர் கூட்டம் வீடியோ மீது தனது நிலைப்பாடு என்ன என்பதை உடனடியாக ஸ்டாலின் விளக்க வேண்டும் என்றும் முருகன் கேட்டுக் கொண்டார்.

இறுதியாக அதிமுக உடனான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்வதாகவும், 2021 சட்டப்பேரவையில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் நிச்சயம் தமிழக  சட்டசபையில்  இருப்பார்கள் என்றும் முருகன் கூற்றியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Leader Murugan Press meet about admk coalition


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->