நாங்கதான் எல்லாமே.. தேர்தல் வரட்டும் பாருங்க - எல்.முருகன் பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உருவ படத்திற்கு, பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் துணைத்தலைவர் வானதி ஸ்ரீனிவாசன், பொதுச்செயலாளர் செல்வகுமார் ஆகியோர் கோவை பாஜக அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தினர். 

இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " பிரணாப் முகர்ஜியின் அரசியல் சிந்தனை, பொருளாதார நடவடிக்கை போன்றவை சிறப்பானவை ஆகும். இளைஞர்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சியினை நோக்கி தாமாக முன்வந்து கட்சியில் இணைகின்றனர். 

மத்திய அரசின் மூலமாக அதிகளவு பொருளாதார பயனை தமிழகம் பெற்று வருகிறது. எதிர்வரும் சட்டப்பேரவையில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவையில் இருப்பார்கள். பாஜக இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும், 60 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெறுவார்கள் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP L Murugan Latest Pressmeet in Coimbatore 1 September 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->