மாஸ் காண்பிக்க நினைக்கும் பாஜக.. பலே வியூகம்.. ஆக மொத்தம் அடடே.! - Seithipunal
Seithipunal


பாஜக பீகார் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து, அடுத்தடுத்து சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மாநிலத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. 2021 ஆம் வருடத்தில் தமிழகம், மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. 

இதனைக்கருத்தில் கொண்டு தமிழகத்தில் பல நடவடிக்கையை பாஜக மேற்கொண்டு வரும் நிலையில், அதிக கவனம் செலுத்த வேண்டிய மேற்கு வங்கமும், தமிழகமும் முக்கிய இடங்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த மேற்கு வங்கத்தில், கடந்த தேர்தலில் பெரும் அதிர்ச்சியையும் கொடுத்தது. மேற்கு வங்காளத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்த பாஜக, மம்தாவிற்கு போட்டியாக உருவாகியுள்ளது. 

இந்த நிலையில், எதிர்வரும் மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல்களில் வெற்றியடையும் பொருட்டு 11 பேர் கொண்ட குழு அமைக்கப்ட்டுள்ளதாகவும், இந்த குழுவின் மூலமாக மேற்கு வங்கத்தில் வெற்றியடையும் வாய்ப்புகள் மற்றும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப்போன்று தமிழகத்திலும் குழுக்கள் அமைக்கப்பட்டு பாஜகவின் தேர்தல் களப்பணிகள் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Indian States Assembly Election Plan 2021


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->