தமிழ் மொழிதான் எல்லாமே.. எம்.ஜி.ஆரின் திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்தியுள்ளோம் - அமித் ஷா.! - Seithipunal
Seithipunal


விழுப்புரத்தில் அமைக்கப்படவுள்ள சிங்கார வேலர் சிலைக்கு அடிக்கல் நாட்டிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவரின் உருவப்படத்திற்கு மரியாதையை செலுத்தினார். இதன்பின்னர், விழுப்புரத்தில் உள்ள ஜானகிபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டார். 

இதன்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, " ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சியை மத்திய அரசாக இருந்து வரும் பாஜக நடத்தி வருகிறது. இந்தியாவின் மூத்த மற்றும் தொன்மையான மொழியான தமிழில் பேச முடியாதது வருத்தத்தை அளிக்கிறது. 

திருவள்ளுவரை பற்றி தெரிந்துகொள்ளவும், தமிழ் மொழியில் பேசவும் பிரதமருக்கு அதிகம் விருப்பம் இருக்கிறது. தமிழ் மண்ணில் பிறந்த மகான்கள் உலகளவில் பல சாதனை செய்துள்ளனர். தமிழ் கலாச்சாரம் இல்லாமல், இந்திய கலாச்சாரம் கிடையாது. 

முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் பல்வேறு நலத்திட்டங்களை பாஜக இந்தியா முழுவதும் செயல்படுத்தி வருகிறது. பாகிஸ்தானின் முகாமிற்குள்ளேயே புகுந்து எதிரிகளை தாக்கி அழித்த அரசு மோடியின் தலைமையிலான பாஜக அரசு தான். 70 வருடம் காங்கிரஸ் செய்யாததை, 7 வருடத்தில் பாஜக செய்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Central Cabinet Minister Amith Shah Election Campaign at Villupuram 28 Feb 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->