தமிழ்வழி படித்தவர்களுக்கு அரசு வேலை! தமிழக அரசு தாக்கல் செய்த மசோதா!! - Seithipunal
Seithipunal


மிழ்வழி கல்வி படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் ஆகிறது. 

இரண்டு நாள் விடுமுறைக்கு பின் தமிழக சட்டசபை இன்று மீண்டும் தொடங்கியது. இதில் தமிழகத்திற்கு செய்யப்பட்டுள்ள மற்றும் செய்யப்பட வேண்டிய நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், தமிழ்வழி பயின்றவர்களுக்கு அரசு வேலைகளில் முக்கியத்துவம் அளிப்பதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சட்டசபையில் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த மசோதாவின் படி தமிழ்வழி கல்வி பயின்றவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் 20% முன்னுரிமை அளிக்கப்படும். 

ஆனால் மாணவர்கள் தங்கள் கல்லூரி படிப்பை மட்டும் தமிழ்வழியில் பயின்று இருக்காமல் 10 மற்றும் 12ம் வகுப்புகளிலும் தமிழ்வழி கல்வியை பயின்று இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bill for employment to tamil language students


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->