இரு சக்கர வாகன விபத்து மரணம்.. தமிழகம் முதலிடம்.! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு இருசக்கர வாகன விபத்து மரணங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

 கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகள் மற்றும் அவற்றால் ஏற்பட்ட மரணங்கள் குறித்து தேசிய குற்ற ஆவண பிரிவு ஒரு புள்ளிவிவர அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, 

கடந்த ஆண்டில் நாடு முழுவதும் சாலை விபத்துகளில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 622 பேர் மரணம் அடைந்துள்ளனர். அவற்றில் இருசக்கர வாகன விபத்துகளால் ஏற்பட்ட மரணம்தான் அதிகம். இந்த விபத்துகளில் 69 ஆயிரத்து 240 பேர் இறந்துள்ளனர். இது மொத்த சாலை விபத்து மரணங்களில் 44.5 சதவீதம் ஆகும். 

இருசக்கர வாகன விபத்துகளால் ஏற்பட்ட மரணங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. அங்கு 8 ஆயிரத்து 259 பேர் இறந்துள்ளனர். உத்தரபிரதேசம் (7 ஆயிரத்து 429 மரணங்கள்) 2-வது இடத்தை பிடித்துள்ளது.

 கார் விபத்துகளால் ஏற்பட்ட மரணங்களில் உத்தரபிரதேசமும், லாரி விபத்து மரணங்களில் மத்திய பிரதேசமும் முதலிடத்தை பிடித்துள்ளன. பேருந்து விபத்துகளால் ஏற்பட்ட மரணங்களில் உத்தரபிரதேசம் (1,337) முதலிடத்தையும், தமிழ்நாடு (551) 2-ம் இடத்தையும் பிடித்துள்ளன


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bike accident TamilNadu no 1 in last year


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->