1000 கோடி மதிப்பீட்டில்,1886 ஏக்கரில் ஆசியாவிலேயே இல்லாத பெரிய திட்டத்தை அறிவித்தார் முதலமைச்சர்.! - Seithipunal
Seithipunal


ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் தலைவாசல் பகுதியில் அமையவிருக்கும் கால்நடைப் பூங்காவிற்கு, வரும் 7ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆத்தூரில் நடைபெற்ற அதிமுக உள்ளாட்சித் தேர்தல் வெற்றிப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இன்றும் உயிரோட்டமாக உள்ள பாடல்கள் மூலமாக நாட்டிற்கு நல்ல வழியை காட்டியவர் எம்ஜிஆர் என புகழாரம் சூட்டினார். தற்போது வெளியாகும் படங்களில் ஆக்கப்பூர்வமான கருத்துகள் இல்லாததால், தற்போதைய திரைப்படங்களை பார்க்கும், பிள்ளைகள் கெட்டுப்போய்விடுவதாக தெரிவித்தார்.

அதிமுகவில் உள்ள அனைத்து தொண்டராலும் முதலமைச்சராக முடியும் என்ற அவர், திமுகவில் அது சாத்தியமா? எனக் கேள்வி எழுப்பினார். ஆசியாவிலேயே பெரிய கால்நடை பூங்கா சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், சுமார் 1886 ஏக்கரில் அமைய உள்ளதாகவும், அதற்கு, வருகிற பிப்ரவரி 7ஆம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

மேலும், சிறுபான்மையின மக்களை அதிமுக கண்ணின் இமைபோல காத்திடும் என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

biggest scheme for cow welfare in asia


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->