பிக்பாஸ் சரவணனுக்கு அடித்த அதிர்ஷ்டம்! தமிழக அரசு வழங்கிய பதவி! - Seithipunal
Seithipunal


பருத்திவீரன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருப்பவர் நடிகர் சரவணன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார்.

பெண்கள் குறித்து தவறாக பேசியதாக கூறி அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

இந்நிலையில், தமிழக அரசு சரவணனுக்கு கௌரவ பதவி ஒன்றை வழங்கி உள்ளது. குறைந்த செலவில் (ஒரு படத்துக்கு 8 பிரதிகளிலிருந்து 25 பிரதிகள் வரை) வெளியிடப்படும் தரமான நேரடித் தமிழ்த் திரைப்படங்களுக்கு, மானியமாக தலா ரூ.7,00,000 வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. 

ஒவ்வோர் ஆண்டும் ஒரு தேர்வுக்குழு நியமிக்கப்பட்டு, படங்கள் தேர்வு செய்யப்படுகிறது. 2007ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டுவரை வெளியான படங்களில் 149 படங்களைத் தேர்வு செய்து, தலா 7 லட்சம் வீதம் 10 கோடியே 43 லட்ச ரூபாய் கடந்தாண்டு தமிழக அரசு வழங்கப்பட்டது.

அந்த வகையில் 2015, 2016, 2017ம் ஆண்டுகளில் வெளியான படங்களைத் தேர்வு செய்வதற்காக புதிய `திரைப்பட மானியத் தேர்வுக்குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. 

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.குலசேகரனைத் தலைவராகக் கொண்ட தேர்வுக் குழுவில், உறுப்பினர்களாகத் திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், வசனகர்த்தா லியாகத் அலிகான் மற்றும் நடிகர்கள் சிங்கமுத்து, பிக்பாஸ் சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigg boss 3 saravanan new post for tn govt


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->