பவானிசாகர் அணையின் நீர்மட்டம்! கனமழை எதிரொலி! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்பிடிப்புப் பகுதிகளிலும் கேரள மாநிலத்துக்குள்பட்ட வயநாட்டிலும் மழை பெய்து வருகிறது. இதனால், கிருஷ்ணராஜ சாகா், கபினி அணைகளுக்கான நீா்வரத்து அதிகரித்தது.

அதே போல ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. 

கடந்த சில நாட்களாக நீலகிரி மலைத்தொடர் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இது பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக விளங்கி வருகிறது.

இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து அணையின் மொத்த கொள்ளளவான 105 அடியில் தற்போது 100 அடியை எட்டியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.82 அடியாக உள்ளது. விவசாய பாசனத்திற்காக அணையில் இருந்து நொடிக்கு 1,200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bhawanisagar dam water level


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->