திமுக ஆட்சி தமிழுக்கான ஆட்சி - எம்.பி கனிமொழி பேச்சு..! - Seithipunal
Seithipunal


பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் சார்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் மணி மண்டபத்தில், மகாகவி பாரதி 60 ஆண்டு வைரவிழா நடந்தது. 

இவ்விழாவுக்கு தமிழ்நாடு கலை, இலக்கிய பெருமன்ற பொதுச் செயலாளர் டாக்டர் அறம் தலைமை தாங்கினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கனிமொழி எம்.பி மற்றும், சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அதன் பின்னர் இவ்விழாவில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி பேசுகையில் தெரிவித்ததாவது:- "அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். சாதி,மத வேறுபாடுகள் இருக்க கூடாது என்று பாடியவர் மகாகவி பாரதியார்.

பல்வேறு மூடநம்பிக்கைகளையும், சமூகத்தில் இருந்த அழுக்குகளையும் துடைத்தெறிய வேண்டும் என்பதற்காக தனது கவிதை, எழுத்துக்களை மக்களுக்காக அர்ப்பணித்த கவிஞர் தான் பாரதி. 

எல்லோருக்கும் நியாயமும், சமூகநீதியும் கிடைக்க வேண்டும், ஆணும் பெண்ணும் சமம் என்ற மகாகவி பாரதியரின் கனவினை தான் இன்று திராவிட மாடல் ஆட்சியாக முதலமைச்சர் மு.கஸ்டாலின் தலைமையிலான அரசு நிறைவேற்றி கொண்டு வருகிறது.

திமுக ஆட்சியில் தமிழ் எழுத்தாளர்கள், மண்ணுக்காக பாடுபட்டவர்களுக்கு அங்கீகாரமும், மரியாதையும் வழங்கப்பட்டு வருகிற நிலையில், திமுக ஆட்சி என்பது தமிழுக்காக, தமிழருக்கான ஆட்சி. தற்போது, அந்த ஆட்சி தான் நடைபெற்று கொண்டு இருக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

barathiyar 60th diamond function


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->