போலீசார் லஞ்சம் கேட்டதால், வாக்குமூலம் கொடுத்துவிட்டு காவல்நிலையத்தின் முன்பே தீக்குளித்த பார் உரிமையாளர்!! - Seithipunal
Seithipunal



திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நெல்லையப்பன் என்பவர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8 இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பார் நடத்தி வருகிறார். நெல்லையப்பனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் அப்பகுதியில் அதிமுக பிரமுகர் ஆனந்த் என்பவரின் ஆதரவுடன் பார் நடத்திவந்துள்ளார். இந்தநிலையில் அவர் நடத்திவந்த  கடையின் வாடகை அடிக்கடி உயர்த்தப்பட்டு வந்துள்ளது.

மேலும், நெல்லையப்பன் பலருக்கு லஞ்சம் கொடுத்து வந்துள்ளார். வாடகைக்கு பணம், டெண்டர் பணம் போன்றவற்றை கட்டுவதற்கு திணறிய நெல்லையப்பன், கடன் அதிகம் ஏற்பட்டு சிரமப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்த நெல்லையப்பன் ஆனந்தன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

 இதனையடுத்து மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகார் ஆனந்தன் மற்றும் திருப்போரூர் ஆய்வாளர் மீது என்பதால், அங்கும் புகாரை வாங்க மறுத்துள்ளனர். இதனையடுத்து நெல்லையப்பன் டிஎஸ்பி அலுவலகத்திலே தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 

இதனையடுத்து அவரை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நெல்லையப்பன் இறப்பதற்கு முன்னர் செங்கல்பட்டு நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து இரண்டு காவல்துறையினர் மற்றும் ஆனந்தன் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bar owner suicide in police station


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->