ஓவர் கடமை உணர்ச்சி..!! முதியவரை உள்ளே வைத்து வீட்டுக்கு சீல் வைத்த வங்கி அதிகாரிகள்..!! - Seithipunal
Seithipunal


வீட்டை ஜப்தி செய்ய வந்தவர்கள் முதியவரை வீட்டுனுள் வைத்து பூட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், காந்தி நகரில்     உள்ள ஒரு வீட்டில் உரிமையாளர் தனது வீட்டை அடமானம் வைத்து தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கியுள்ளார்.

ஆனால், அவர் கடனை திரும்ப செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் வீடு ஜப்தி செய்யப்படும் என வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனை அடுத்து அவர் வீட்டை ஜப்தி செய்து கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுவிட்டார்.

இதனை அடுத்து வீட்டை ஜப்தி செய்ய வங்கி அதிகார்கள் வந்துள்ளனர். இந்நிலையில், அந்த வீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக புருஷோத்தம்மன் என்பர் வசித்து வருகிறார். அறுவை சிகிச்சை செய்திருப்பதால் அவர் முதல் தளத்தில் தூங்கியுள்ளார்.

இதனை கவனிக்காகத வங்கி ஊழியர்கள் வீட்டை வெளியில் பூட்டி சீல் வைத்தனர். இந்நிலையில், தனது தந்தையை பார்க்கவந்த மகன் வீடு சீல் வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து வங்கி அதிகாரிகளளிடம் அவர் கேட்டதற்கு சீல் வைத்தது குறித்து தெரிவித்தனர்.உடனே காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர் புருஷோத்தம்மனை மீட்டு அவருக்கு உணவு வழங்கினர்.

வங்கி அதிகாரிகள் இது குறித்து விளக்கம் அளிக்கையில், இங்கு ஒருவர் குடியிருக்கிறார் என்ற தகவலை வீட்டின் உரிமையாளர் தரவில்லை எனகூறினர். எப்படி இருந்தாலும் வீட்டினுள் யார் இருக்கிறார்கள் என கவனிக்காமல் வங்கி அதிகாரிகள் செய்த இந்த செயலை காவல்துறையினர்

கண்டித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bank officials who confiscated the house


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->