திருடப்போற இடத்தில் செல்போன் ரிஸ்க்.. வாக்கி டாக்கி இஸ் பெட்டர்.. திருட்டு கும்பலின் பகீர் வாக்குமூலம்.!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியில் திவ்யம் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக் கடை செயல்பட்டு வந்தது. இந்த நகை கடையின் உரிமையாளர் ஸ்ரீபாஷ்யம் என்பவரின் பங்களா வீட்டில், கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் கொள்ளையர்கள் புகுந்து கொள்ளை அடித்துள்ளனர். 

பங்களாவில் இருந்த 2.25 கிலோ தங்க நகைகள், 57 கேரட் வைரங்கள், ரூ.6 இலட்சம் ரொக்கம் மற்றும் அமெரிக்க டாலர்களை மொத்தமாக கொள்ளையடித்துச் சென்றனர். பங்களாவில் இருக்கும் கேமராவில் 2 வாலிபர்கள் சுவர் ஏறி குதித்து வந்து கொள்ளையடித்து விட்டுச் செல்வது தெரியவந்துள்ளது. 

இதை வைத்து கடந்த 9 மாதமாக சூரமங்கலம் காவல்துறையினர் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தநிலையில், பங்களாவில் கைப்பற்றப்பட்ட கைரேகைகள் எந்த குற்றவாளிகளுடன் ஒப்பிட்டு பார்த்தும் பலனில்லை. இந்த நிலையில், கடந்த மாதம் பெங்களூரில் நகைக் கடையை கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைதுசெய்தனர். 

இவர்களிடம் நடத்திய விசாரணையில், பெங்களூரில் இருக்கும் 31 வீடுகளிலும், சேலத்தில் இருக்கும் நகைக்கடையிலும் திருடியதை ஒப்புக்கொண்டனர். இந்த நிலையில், ஒரு நபருக்கு ரூ.1 இலட்சம் வீதம் அபராதம் செலுத்தி தனி நபர் ஜாமீன் பெற்று வெளியே வந்த நிலையில், இப்போது அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். மேலும், அவரது பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் இருப்பதால், அவர்கள் வெளிநாடு தப்பிச் சென்றிருக்க முடியாது என்று தமிழக காவல்துறையிடம் பெங்களூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து, அந்தப் பெண் உட்பட 3 பேரின் புகைப்படங்களுடன் சூரமங்கலம் காவல்துறையினர் பெங்களூரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கொலம்பிய நாட்டில் இருந்து விமானத்தில் வந்த இந்த கொள்ளை கும்பல், செல்போன் சிக்னல்கள் மூலமாக தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று அறிந்து, வாக்கி டாக்கி மூலமாக தகவலை பரிமாறி திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், இது போன்ற கொள்ளை கும்பலின் 5 கொள்ளையர்கள் இடம் பெற்றுள்ள நிலையில், மூன்று பேர் மட்டும் தற்போது வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bangalore Colombia Thief Gang Arrest By Police


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->