பாதிக்கப்பட்டுள்ள வாழைப்பழ ஏற்றுமதி.. ரூ.6 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் கேரளாவிற்கு செல்லவிருந்த நேந்திரம் வாழைப்பழங்கள் அதிகளவு தேக்கமடைந்தது. இதன் காரணமாக நேந்திரம் பழம் விலையானது கடுமையாக வீழ்ச்சியடைந்தது. 

மேலும், இதனைப்போன்று பூவன், மொந்தன், ரஸ்தாளி, ஏலகிரி, கற்பூரவள்ளி போன்ற வாழைப்பழங்களும் கடுமையான அளவு விலை வீழ்ச்சியை சந்தித்தது. இதனை தொடர்ந்து விநியோகம் செய்ய இயலாத சூழலும் ஏற்பட்டது.

இந்நிலையில், தமிழகம் முழுவதிலும் வாழைப்பழ வர்த்தக ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக வாழைப்பழ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம், தற்போதைய மே மாதம் ரூ.200 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

கொரோனா காரணமாக வாழைப்பழ வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருந்தாலும், தற்போது பெய்த மழை மற்றும் பலமான காற்றின் காரணமாக கடுமையான சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், திருச்சி மற்றும் கரூர் விவசாயிகளுக்கு ரூ.1 இலட்சம் ஏக்கருக்கு இழப்பீடு தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Banana sales reduced deduced corona amid


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->