'திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும்; ஆடு, கோழி பலியிட தடை; நீதிமன்றம் உத்தரவு..!
Ban on sacrificing goats and chickens on Thiruparankundram hill
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதாவது, திருப்பரங்குன்றம் மலையின் உரிமையாளர் சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம். மலை மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் தர்காவிற்கு தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, அங்கிருந்து தர்காவிற்கு செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர மலையிலுள்ள பிற பகுதிகள் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமானவை என ஆங்கிலேயர் ஆட்சியின் போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலர் மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட, மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அத்துடன், அக்கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் ராமலிங்கம், 'பக்ரீத் பண்டிகையையொட்டி கோயிலுக்குச் சொந்தமான பாதையை மறைத்து நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த தர்கா நிர்வாகிகள், முஸ்லிம்கள் முயற்சிக்கின்றதாகவும், தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
குறித்த வழக்குகளை ஏற்கனவே ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அடங்கிய நீதிபதிகள் அமர்வு விசாரித்த நிலையில், இந்த வழக்கில் கடந்த ஜூன் 24இல் நீதிபதி ஜெ.நிஷாபானு பிறப்பித்த உத்தரவில் ' அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்கிறேன்' என்று தெரிவித்து இருந்தார்.

இதிலிருந்து நீதிபதி எஸ்.ஸ்ரீமதி மாறுபட்டு சில மனுக்களை அனுமதித்தும், சில மனுக்களை தள்ளுபடி செய்தும் ஒரு மனுவை பைசல் செய்தும் உத்தரவிட்டார். மேலும், இந்த சட்டப் பிரச்னையில் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு தகுந்த உத்தரவு பிறப்பிப்பதற்காக குறித்த வழக்கின் 03 வதாக நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதனை இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி விஜயகுமார், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அதனைப் பலியிடத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். அத்துடன், அந்த மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும் எனவும் உத்தரவில் கூறியுள்ளார்.
English Summary
Ban on sacrificing goats and chickens on Thiruparankundram hill