கோலாகலமாக பசுவுக்கு சீமந்தம் செய்த குடும்பத்தினர்!! உற்சாகத்தோடு கூறிய நெகிழ்ச்சி காரணம்!!  - Seithipunal
Seithipunal


பொதுவாக நமது கிராமங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏழு அல்லது ஒன்பது மாதத்தில் சீர்வரிசைகளுடன் சீமந்தம் நடப்பது வழக்கம். ஆனால், காட்பாடியில் அதுபோல பசுமாட்டிற்கு சீர்வரிசைகளுடன் சீமந்தம் நடந்துள்ளது.

காட்பாடி பகுதியில் வசிக்கும் மைக்கேல் என்பவர் அவர் மனைவி மற்றும் 3 மகள்களுடன் வசித்து வருகிறார். இவர் இரண்டு மகன்கள் பெங்களூரில் குடும்பத்துடன் இருக்கின்றனர். குமார் அவரது சொந்த ஊரிலேயே விவசாயம் செய்து வருகிறார்.

இவர், 'ஒன் மேன் ஆர்மி' என்ற பசுவை வளர்த்து வருகிறார். இந்த பசுவை காளைகளை போல வளர்த்து காளை விடும் நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்து 50க்கும் மேற்பட்ட பரிசுகளை வாங்கியுள்ளார் குமார்.

3 மகன்களை கொண்ட குமார் அவரது வீட்டில் பெண் வாரிசு இல்லாததால், 'ஒன் மேன் ஆர்மி' யை தனது மகளாக கருதி சீமந்தம் செய்ய ஆசை கொண்டார். இந்நிலையில், சீமந்தத்திர்க்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதை அடுத்து உற்றார், உறவினர், நண்பர்கள், ஊர் பொதுமக்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு நேற்று இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது.

மேளதாளத்துடன் சீர்வரிசை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து பசுவுக்கு சந்தனம் பூசி, ஆரத்தி எடுத்து சீமந்தம் நடத்தி முடித்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு அசைவத்துடன் வழங்கப்பட்டது. இதுகுறித்து, அவர்கள், "வீட்டில் பெண் இல்லாததால் பசுவை பெண்ணாக நினைத்து தான் இதனை நடத்தினோம்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

baby shower function for cow in katpadi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->