அயோத்தி தீர்ப்பு எதிராக பேஸ்புக்கில் 8000 பதிவுகள் .! வசமாக சிக்கிய 70 பேர்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவே எதிர்பார்த்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு கடந்த 9 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் அமைதியை சீர்குலைக்கும் விதமாக கருத்துகள் வெளியிடப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் சமூக வலைத்தளங்களை உத்தரபிரதேச காவல்துறையினர் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர்.

சமூக வலைத்தளங்களை மாநிலத்தில் நல்லிணக்கத்துக்கும் சட்ட ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தேவைப்பட்டால், தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்றும் உத்தரபிரதேச போலீஸ் டி.ஜி.பி. ஓ.பி.சிங், அயோத்தி தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, உத்தரபிரதேசத்தில் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் 8 ஆயிரத்து 275 சர்ச்சை பதிவுகள் கண்டறியப்பட்டன. இவற்றில் டுவிட்டர் தளத்தில் மட்டும் 2 ஆயிரத்து 869 பதிவுகளும், பேஸ்புக் தளத்தில் 1,355 பதிவுகளும் கண்டறியப்பட்டன. 

மேலும், யூடியூப் தளத்தில் சர்ச்சை 98 வீடியோக்கள் கண்டறியப்பட்டன. பொது அமைதி, சட்ட ஒழுங்குக்கு பதியப்பட்ட அனைத்து பதிவுகளையும் உடனே நீக்குமாறு சம்பந்தப்பட்ட சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களை காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர். 

காவல்துறையின் உத்தரவை மீறியவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த இரண்டு தினங்களில் 70 பேர் கைது செய்யப்பட்டதாக உத்தரபிரதேச போலீசார் தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ayoti case judgement issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->