இனி ஏழை எளிய பள்ளி மாணவர்களும் டூர் போகலாம்..! அரசு அதிரடி அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் சார்பாக அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா தமிழ் நாடு அரசு சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. இந்த சுற்றுலா பயணத்தை இன்று மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் இருந்து மாவட்டம் ஆட்சியர் வினய் கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் 2019-2020 அறிவிப்பின்படி தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு பள்ளிகளில் பயிலும் எளிய மாணவ மாணவிகளுக்கு தலா 75 வீதம் 150 பேர்களை தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சார்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சுற்றுலாத் தலங்களுக்கு பயணம் மேற்கொண்டார்கள். 

சுற்றுலா செல்லும் இடங்கள் பாம்பன் பாலம், மத்திய கடல் சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் மண்டபம், விவேகானந்தர் நினைவு மண்டபம், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவு மண்டபம் போன்ற பகுதிகள் ஆகும். 

இந்த ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவில் பங்குபெறும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சுற்றுலா தொடர்பான வினாடி-வினா போட்டி நடத்தி சிறப்பு பரிசுகளும் காலை மற்றும் மாலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்படும். சுற்றுலா தொடர்பான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலர் மூலம் செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

awareness tour taken by government


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->