உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு – ஆறாம் வகுப்பில் பாடமாக சேர்ப்பு….! - Seithipunal
Seithipunal


 

நம் இந்தியாவில், கடந்த 1994-ஆம் ஆண்டில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான சட்டம் அமல் படுத்தப்ட்டது.

ஆனாலும், இது பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே இருந்து வந்தது. அவ்வப்போது இந்த உடல் உறுப்பு தானத்தைப் பற்றிய செய்திகள் வருவதோடு சரி. கடந்த 2008-ஆம் ஆண்டு, திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த, மருத்துவத் தம்பதிகளின் மகன் ஹிதேந்திரன் (அப்போது வயது 16) மூளைச் சாவு அடைந்ததும், அவனுடைய இதயம், பெங்களுரில் உள்ள ஒரு சிறுமிக்கு, பொருத்தப் பட்டது.

அந்த இதயத்தைக் கொண்டு செல்வதற்கு, காவல் துறை, போக்குவரத்து துறையினர் என அனைவரும் ஒத்துழைப்பு தந்தனர். தற்போது, மாற்று இருதயம் பொருத்தப்பட்ட அந்த சிறுமி, நலமுடன் உள்ளார். இது பற்றிய விழிப்புணர்வு பற்றி, தமிழில் சினிமாவாகக் கூட படம் எடுக்கப் பட்டிருந்தது.

இந்த உடல் உறுப்பு தானத்தின் பயன்களைப் பற்றி, சிறு வயது முதலே மாணவர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்ட தமிழக அரசு, அதனைத் தற்போது ஆறாம் வகுப்பிற்கு பாடமாக, சேர்த்துள்ளது.

ஆறாம் வகுப்பு, மூன்றாம் பருவத்திற்கான பாடப் புத்தகத்தில், விரிவானம் என்ற பகுதியில், “முடிவில் ஒரு தொடக்கம்” என்ற தலைப்பில் பாடமாக வைக்கப் பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

awareness about orgon donation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->