சரித்திரம் படைத்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - நீதிமன்றமே பிறப்பித்த அதிரடி உத்தரவு : கொண்டாட்டத்தில் பொதுமக்கள்..! - Seithipunal
Seithipunal


அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராகவன் தலைமையில் விழாஒருங்கினைப்பு குழுவையும் கிராம பொதுமக்கள் 16 பேர்அடங்கிய விழா ஆலோசனைக் குழுவினரையும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நியமித்து உத்தரவிட்டது..

அதன்படிஜனவரி 15 அன்று அவனியாபுரத்தில் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு விழா ஒருங்கிணைப்புக்குழு ஜல்லிக்கட்டினை நடத்தி முடித்தது.

இந்நிலையில் விழா ஒருங்கிணைப்புக்குழுவை சேர்ந்தவழக்கறிஞர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள்முன்பாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்தியது சம்பந்தமான அறிக்கையையும் வரவு - செலவு கணக்கையும் தாக்கல் செய்தனர்.

தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ஜல்லிக்கட்டு போட்டி உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி சிறப்பாகநடத்தப்பட்டது.

பரிசு பொருட்களாக நன்கொடைதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பொருட்களை ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பகிர்ந்துகொடுத்துவிட்டோம்.

ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகளுக்கோ, மாடுபிடி வீரர்களுக்கோ பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை.

மதுரை மாநகராட்சி ஆணையாளர் தலைமையிலான மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட நிர்வாகமும், கிராம பொதுமக்களும் சிறப்பாக ஒத்துழைப்பு அளித்தனர் என்று தெரிவித்திருந்தனர்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஜல்லிக்கட்டுஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ராகவனுக்கு ஒரு லட்சத்தி 75 ஆயிரம் ரூபாயும் குழு உறுப்பினர்களான வழக்கறிஞர்கள் திலீப் குமார், சரவணன், ஆனந்த்சந்திரசேகர் ஆகியோருக்கு தலா ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும் மதுரை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும்என்றும் ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்தி முடித்த குழுவினருக்கு பாராட்டுக்களையும், ஒத்துழைப்பு தந்த மதுரை மாநகராட்சி ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Avaniapuram-Jallikattu-Appreciate-Jallikattu-Coordination


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->