கொடைக்கானல் சுற்றுலாவிற்கு இனி கையை வீசிக்கொண்டு செல்லலாம்.! சார் ஆட்சியர் அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் கொடைக்கானலை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க அனுமதி அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்  கூறியிருந்தார். 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி 09/09/2020 முதல் கொடைக்கானலை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், ஆனால் திண்டுக்கல் மாவட்டம் அல்லாமல் வெளி மாவட்ட பயணிகள் இ-பாஸ் பெறுவது கட்டாயம் என தெரிவித்து இருந்தார். 

மேலும், உள் மாவட்ட பயணிகளுக்கு அடையாள அட்டை அவசியம். முதற்கட்டமாக கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஸ் பூங்கா திறக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், தற்போது கொடைக்கானலுக்கு பொது பேருந்து மூலம் வருபவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும், கொரோனா தீவிரமடைந்தால் மாற்றி அமைக்கப்படலாம் என்றும் சார் ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

attention to kodaikanal tourist visitors


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->