காதலியை பார்க்க சென்ற இளைஞர்.. இரவு முழுவதும் மரத்தில் கட்டி வைத்து அடித்த அவலம்...! - Seithipunal
Seithipunal


காதலியை பார்க்க சென்ற இளைஞரை கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் வேட்டைக்காரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரசுதன். இவர் அந்த பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்தார். அவருக்கும் அதே தோட்டத்தில் வேலை செய்யும் இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

இந்நிலையில், ஹரிஹர அந்த தோட்ட வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு சென்று வந்துள்ளார். இருப்பினும், தினமும் அந்த பெண்ணிடம் தொலைபேசியில் பேசுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். ஹரிஹரன் அடிக்கடி அந்த பெண்ணிடம் தொலைபேசியில் பேசுவதை கண்டித்த அந்த தோட்டத்தின் உரிமையாளர், ஹரிஹரனின் உறவினர்களிடம் எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால், அதனை ஹரிஹரசுதன் கண்டுகொள்ளாமல் இருந்து வந்துள்ளார். இதற்கிடையில் தனது காதலியை பார்க்க ராமசாமியின் தோட்டத்துக்கு ஹரிஹரன் சென்றுள்ளார்.  இதனை கண்டு ஆத்திரமடைந்த தோட்ட உரிமையாளர் ராமசாமி. தனது தோட்ட பணியாளர்களை கொண்டு அவரை தாக்கிசொல்லியுள்ளார். அந்த தோட்டத்தின் கணக்குபிள்ளை மற்றும் தோட்ட பணியாளர்கள் ஹரிஹரனை கடுமையாக தாக்கினர்.

மேலும் இரவில் வீட்டிற்கு விடாமல் மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர் இதன் காரணமாக அவர் மயக்கமடைந்து உடனே அவரை விடுவித்து வீட்டிற்கு அனுப்பி உள்ளனர். மகன் உடலில் காயங்களுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அவரிடம் என்ன நடந்தது என கேட்டுள்ளனர்.

ஹரிஹரசுதன் நடந்தவற்றை கூட அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் தோட்டத்தின் உரிமையாளர் ராமசாமி மற்றும் அங்கு பணிபுரியும் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Attack on a young man who went to see his girlfriend


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->