செந்தில் பாலாஜிக்கு ஸ்டாலின் வக்காலத்து.! ஈபிஎஸ், ஓபிஎஸ் கொடுத்த டிஷ்யூம்.!! குறுக்கே வந்த துரைமுருகன்.!!  - Seithipunal
Seithipunal


சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை குறித்த விவாதத்தில் திமுக உறுப்பினர் செந்தில்பாலாஜி, அதிமுகவை சேர்ந்தவர்களை தரக்குறைவாக விமர்சித்தார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். 

senthilbalaji,seithipunal,

அதன் பின்னர் முதல்வர், "செந்தில் பாலாஜி இவ்வாறு பேசியிருப்பது தவறு. மூன்று ஆண்டுகளில் எவ்வளவோ மாறி இருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரியும்." எனக் கூறினார். 

ops,assembly.seithipunal

அதற்கு ஸ்டாலின், "செந்தில் பாலாஜி கட்சி மாறியதாக பேசுகிறீர்கள். முதல்வர் அருகில் இருக்கும் துணை முதல்வர், தர்மயுத்தம் நடத்தியதை எல்லாம் பற்றி பேசுவாரா.? எனக் கேட்க, 

sendhilbalaji,stalin,dmk,seithipunal,duraimurugan

ஆவேசமடைந்த துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்,  "நாங்கள் எங்கள் இயக்கத்துக்கு தான் தர்மயுத்தம் செய்தோம் சுயநலத்திற்காக காட்சி மாறவில்லை. செந்தில் பாலாஜி காலில் இருக்கும் ஸ்கேட்டிங் சக்கரத்தை கழட்டி முதலில் அமர வையுங்கள். அவர் குனிந்து, குனிந்து பதவி வாங்கியது. எங்களிடம் படமாகவே இருக்கிறது. எடுத்துக்காட்டவா?" என கேட்க,

அதற்கு, ஸ்டாலின், "நீங்கள் கூட தவழ்ந்து, தவழ்ந்து பதவி வாங்கிய வீடியோ என்னிடம் இருக்கின்றது, காட்டவா.?" என எகிற,

edappadi,seithipunal,assembly,

எடப்பாடி பழனிசாமி ஆத்திரமடைந்து, "செந்தில்பாலாஜி திமுகவில் இருந்தபோது திமுக தலைவர் ஸ்டாலினை எப்படி எல்லாம் பேசினார்.? என்பதை வாசித்துக்காட்டினார்.

இதற்கெல்லாம், முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திமுக பொருளாளர், காட்பாடி துரைமுருகன், "ஒரு கட்சியின் போக்கு பிடிக்கவில்லை என்றால், மற்றொரு கட்சியில் மாறுவது இயல்பான ஒன்றுதான். முன்னதாக நடந்தத எல்லாம் விமர்சிப்பது, நாகரீகமானதல்ல.  தேவையானவற்றை பேசுங்கள்." என தெரிவித்தார். இதன் பின்னரும் இரு தரப்பும், சட்டசபையில் பரபரப்புக்கு குறைவில்லாமல் வாதங்கள் நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

assembly violence today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->