சட்ட பேரவையை கூட்ட துடிக்கும் ஸ்டாலின்.! தமிழக பிரச்னைகள் தீருமா.? - Seithipunal
Seithipunal


சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல். தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் மற்றும் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவும் இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க கோரியும் கூட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் மான்யக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்கும் வாக்கெடுப்பிற்கும்  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டம் இன்னும் நடைபெறாமல் இருப்பதும், அதன் காரணமாக அரசுத் துறைகளின் பணிகளில் தேக்க நிலை ஏற்பட்டிருப்பதும், மிகுந்த வேதனையளிப்பதாக கூறியுள்ளார்.

தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கான நீர்ப்பாசனத்திற்கு மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்படாத அவல நிலைமை, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் இன்றுவரை கர்நாடகம் தண்ணீர் திறக்காதது, அதற்கு எவ்வித தொடர் நடவடிக்கையையும் இல்லை. இது தொடர்பாக விவாதிக்க சட்ட மன்றம் கூட்ட பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழக அரசு சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு முதல்வர் பயம் கொள்வாரானால், ஆளுநர் உடனடியாக முக்கியமான இந்தப் பிரச்சினையில் தலையிட்டு  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையைக் கூட்ட ஆணை பிறப்பித்து ஜனநாயகக் கடமையை உரிய முறையில் ஆற்றிட வேண்டும் என்று சட்டப் பேரவையின் எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.  மேலும்  சட்டமன்றக் கூட்டத்தை தள்ளிப் போடுவது, தேவையில்லாத குழப்பங்களுக்கும் நெருக்கடியும் சந்திக்க நேரிடும் என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assembly should be convened for public issues


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->